கரூர்: ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பிக்க வரும், 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின், 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 22அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்டீரிசன், ஒயர்மேன், மோட்டார் மெக்கானிக் டிராப்ட்மென், சிவில் வெல்டர் மெக்கானிக் டீசல் ஆகிய தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், காலியாக உள்ள இடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. அவர்கள்,www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள், 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 31ம் தேதி அந்தந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து மாணவர்கள், 32 மாவட்டங்களில் எந்த ஒரு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சேரலாம்.
மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண் 04324 - 222111ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment