மாணவர்களை இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்!

புதுச்சேரி: சென்னை ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் ஐ.ஏ.எஸ்.இலவச பயிற்சிக்குஅனுப்பப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என எஸ்.ஆர். சுப்ரமணியம் நற்பணி இயக்க பொதுச் செயலாளர் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமிக்குஅவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில்ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேர்வின் அடிப்படையில் 20 மாணவர்களை தேர்ந்தெடுத்துஇந்திய ஆட்சிப்பணி முதல் நிலை மற்றும் பிரதான தேர்வுக்கான இலவச பயிற்சி (டி.ஐ.எம்.இ.ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் சென்னை) அளிப்பதற்கு உண்டான கட்டணத்தொகையும்ஊக்கத்தொகையும்இந்த கழகத்தின் மூலம் புதுச்சேரி அரசு வழங்குகிறது.
இந்தாண்டு (2016-17) முதல்புதுச்சேரி அரசுபயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 20ல் இருந்து50 ஆக உயர்த்தி உள்ளது மகிழ்ச்சியான செய்தி.
எனினும்புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிகம் இருப்பதாலும்இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்க அதிகம் ஆர்வம் உள்ளதாலும்மாணவர்களின் எண்ணிக்கையைமேலும் அதிகப்படுத்த வேண்டும்.
குறிப்பாக ஊக்கத்தொகையை தவிர்த்துபயிற்சிக்கான கட்டணத்தை மேலும், 75 மாணவர்களுக்கு அளித்தால்பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் 125 மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment