மும்பை பள்ளிகளில் கட்டாயமாகிறது யோகா

மும்பை:மாநகராட்சி பள்ளிகளில்யோகா மற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை கட்டாயமாக்கும் தீர்மானத்தைமும்பை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில்பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மாநகராட்சி மேயர்: இங்குள்ள மும்பை மாநகராட்சியும்சிவசேனா - பா.ஜ.கூட்டணி வசமே உள்ளது;சிவசேனாவை சேர்ந்த ஸ்நேகல் ஆம்பேகர்மாநகராட்சி மேயராக உள்ளார்.
இந்நிலையில்மும்பையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும்யோகா மற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை கட்டாயமாக்கஆளும் கூட்டணி தீர்மானம் கொண்டு வந்ததுஇதற்கு,சமாஜ்வாதிகாங்.உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன்நேற்று இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உருது மொழி:
இதையடுத்துமும்பையில் இயங்கி வரும், 1,188 துவக்கப் பள்ளிகள் மற்றும் 49 உயர்நிலைப் பள்ளிகளில்யோகா மற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகள் கட்டாயமாக்கப்படவுள்ளன. இவற்றில்உருது மொழி வழிக் கல்வி பயிற்றுவிக்கும், 400 பள்ளிகளும் அடங்கும்.
ஹிந்துத்துவா திணிப்பு!
யோகா பயிற்சியை கட்டாயமாக்குவதற்கு பதிலாகவிரும்பும் மாணவர்கள் அதை கற்கலாம் என தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்கார பயிற்சியை கட்டாயமாக்குவதன் மூலம்,ஹிந்துத்துவா கொள்கைகள் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராய்ஸ் ஷேக்சமாஜ்வாதி மூத்த தலைவர்

0 comments:

Post a Comment