மழலைகள் சேர்க்கையை அதிகரிக்க ஹைடெக் பாடதிட்டம்!

சரிந்து வரும் மாணவர் சேர்க்கையை துாக்கி நிறுத்த ஹெடெக் பாடத் திட்டத்துடன் அங்கன்வாடி மையங்கள் களம் இறங்கியுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப அனைத்து கிராமங்களிலும் அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் 888 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
மழலைகளுக்கு பாடம் நடத்துதல்முதியோர்விதவை உள்ளிட்டவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட பணிகள்அங்கன்வாடி மையங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால்முதன்மை நோக்கமான,மழலைகளுக்கு அடித்தளக் கல்வி போதிக்கும் பணியிலிருந்துஅங்கன்வாடி மையங்கள் முற்றிலும் தடம்புரண்டு போய்விட்டன.
எண்ணிக்கை சரிவு
மத்திய அரசின் விதிப்படிஅங்கன்வாடி மையத்தில் 40 குழந்தைகளுக்கு ஒரு டீச்சர்ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். ஆனால்புதுச்சேரியிலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தலா ஒரு டீச்சர்உதவியாளர் இருக்கின்றனரே தவிரபோதுமான எண்ணிக்கையில் மழலைகள் இல்லை. சில இடங்களில் 10க்கும் குறைவான குழந்தைகளே படிக்கின்றனர். ஒரு சில இடங்களில் அது கூட இல்லை. குறிப்பாக நகரப் பகுதி அங்கன்வாடிகளில் குழந்தைகள் இல்லாமல் ஆசிரியர்களுக்கே போர் அடிக்கும் சூழ்நிலை உள்ளது.
எல்.கே.ஜி.ஆசை
பொதுவாக 3 வயது முடிந்த மழலைகளைஅங்கன்வாடி மையங்களில் முறைசாரா முன்பருவக் கல்வி பயில சேர்க்கின்றனர். இதே 3 வயதுடைய மழலைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.,வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்ப்பதைவிடஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.வகுப்பில் சேர்ப்பதை பல பெற்றோர் விரும்புகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் சேர்க்கும் மழலைகளின் எண்ணிக்கை சரிந்து விட்டது.
கடந்த காலங்களில்ஒரு அங்கன்வாடி மையத்தில் மழலைகளின் எண்ணிக்கை 50க்கும் மேல் இருந்தது. அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.துவக்கிய பிறகு 50 சதவீத அங்கன்வாடி மையங்களில் தான் மாணவர்கள் உள்ளனர்.
புது திட்டம்
அங்கன்வாடி மையங்கள் மூடுவிழாவை நோக்கி பயணிப்பதைக் கண்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைந்த குழந்தை நல திட்ட பிரிவு சுதாரித்துக் கொண்டுதற்போது
புதிய ஹைடெக் பாடத்திட்டத்தை வடிவமைத்துகளம் இறங்கியுள்ளது. இதன்படி ஒவ்வொரு நாளும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டு முறையில் அடிப்படை விஷயங்களை கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் ஒரு கருபொருளை மையமாக கொண்டுமழலைகளுக்கு பாடம் கற்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆகஸ்ட் மாதம் என்றால்அந்த மாதம் முழுவதும் விலங்குகள் பற்றி எளிய நடையில் அறிமுகங்கள் செய்ய வேண்டும். அவர்களையும் அதில் பங்கேற்க செய்துவிலங்குகளை இனம் காண செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மைய மாணவர் சேர்க்கையை துாக்கி நிறுத்தும்புதுச்சேரி மாநிலத்தின் ஒருங்கிணைந்த குழந்தை நலத்திட்ட ஹைடெக் பாடத்திட்ட முயற்சியை மத்திய ஒருங்கிணைந்த குழந்தை நலத்திட்ட அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
3 வயது இருந்தால் தான் மாணவர் சேர்க்கை என்பதை இரண்டரை வயதாக தளர்த்திஅங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,500 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
ஊட்டச்சத்துடன்தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடித்தள கல்வியில் கவனம் செலுத்த அங்கன்வாடி மையங்கள் முடிவு செய்துள்ளதால், 10 ஆயிரம் வரையில்மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment