100 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை!

100 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை!


கோவை: அரசு பொதுத்தேர்வில்முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
மனித நேய பேரவையின்உலக சமாதான நட்புறவு பூங்காவின், 11ம் ஆண்டு பரிசு விழாகோவை வடவள்ளியில் நடந்தது. விழாவிற்குஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமிசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
நிகழ்ச்சியில்யூனியன் வங்கியின் துணை பொது மேலாளராக பதவி உயர்வு பெற்ற ஆர்.முரளியும்,என்.டி.சி.ரங்க விலாஸ் மில்லின் மேலாளராக பதவி உயர்வு பெற்ற எம்.பி.சிவசாம்ராஜனும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். 
இவர்களுடன்சமாதான புறா விருது பெற்ற என்.உமாதாணுவும் பாராட்டப் பட்டார். கோவை மாநகராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிமாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில்முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்குதலா, 2,000, 3,000,மற்றும் 5,000 ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்வி ஊக்கத்தொகையாக, 100 மாணவர்களுக்குதலா, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய். திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. புரவலர் ராமசாமி வரவேற்றார்.

0 comments:

Post a Comment