மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் செயல்பட்ட இரு உறுப்பினர் கன்வீனர் கமிட்டி,ஒரு உறுப்பினர் கமிட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது.
இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் உயர்கல்வி செயலர் தலைமையில் இரு உறுப்பினர்கள் கொண்ட&'கன்வீனர்&' கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிந்ததால், கல்லுாரிக் கல்வி இயக்குனர் சேகர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அவரும் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த இடத்தில் தொழில்நுட்ப கல்லுாரி கல்வி இயக்குனர் மதுமதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மற்றொரு உறுப்பினரான வெங்கட்ராமனின் பதவிக் காலமும் முடிந்தது.
இதற்கிடையே, சென்னையில் உயர்கல்வி செயலர் கார்த்திக் தலைமையில் நேற்று நடந்தசிண்டிகேட் கூட்டத்தில், வெங்கட்ராமனுக்கு பதில் புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், ஒரு உறுப்பினர் கமிட்டியே செயல்பட ஒப்புதல் வழங்கப்பட்டது. புதிய பதிவாளர் (பொறுப்பு) விஜயன் பொறுப்பேற்றதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment