புதுச்சேரி: துருக்கி நாட்டு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் களிமண் பொம்மை தயாரிக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
துருக்கி நாட்டு பள்ளியை சேர்ந்த 16 மாணவர்கள் கலாசார பரிமாற்ற பயணமாக புதுச்சேரி வந்துள்ளனர்.
வில்லியனுாரில் இயங்கிவரும் களிமண் பொம்மை தயாரிக்கும் மையத்தில் இவர்கள் ஒரு வாரம் தங்கி பாரம்பரிய கலையான களிமண் பொம்மை தயாரிக்கும் பயிற்சியினை பெறுகின்றனர். அவர்களுக்கு,தேசிய விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி பயிற்சி அளிக்கிறார்.
புதிய தலைமுறையினருக்கு பாரம்பரிய கலையினை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment