கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில்,இளங்கலை பட்டப்படிப்பிற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, நாளை (ஆக.18) நடக்க இருப்பதாக, முதல்வர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில், 2016-17 ம் கல்வியாண்டிற்கான, இளங்கலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகளில், ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அறிவியல் பாடப்பிரிவிற்கு நாளை (ஆக. 18) காலை, 10 மணிக்கும், கலை பிரிவு பாடப்பிரிவுகளுக்கு, 19 ம் தேதி காலை, 10 மணிக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்விற்கு தனியாக எந்தவொரு தகவலும் அனுப்பப்படாது. எனவே, இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment