காந்திகிராம பல்கலையில் ’இருக்கு ஆனா, இல்லே’

காந்திகிராம பல்கலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என புதுடில்லி தேசிய தர நிர்ணய குழுவின் தலைவர் பேராசிரியர் சிரோகி தெரிவித்தார்.
கடந்த ஆக., 22, 23 ஆகிய நாட்களில் பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய குழுவினர் (நாக் கமிட்டி) திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் ஆய்வில் ஈடுபட்டனர். இக்குழுவில் டில்லி ஐ.ஐ.டி.பேராசிரியர் ராஜ்பால் எஸ்.சிரோகிஅஜ்மீர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சர்மாடில்லி என்.சி.ஆர்.டி.இ.,அமைப்பு மைய தலைவர் பூனம் அகர்வால் உள்ளிட்ட 9 பேர் ஆய்வில் ஈடுபட்டனர்.
உட்கட்டமைப்புதுறை சார்ந்த செயல்பாடு உள்ளிட்ட ஏழு சிறப்பம்சங்கள் மற்றும் 32 சிறப்புக் கூறுகள் அடிப்படையில் ஆய்வு நடந்தது. மாணவர்கள்பேராசிரியர்கள்அலுவலர்களுடன் கலந்துரையாடினர். பின்ஆய்வுகள் குறித்த உத்தேச கையேடை துணைவேந்தர் நடராஜனிடம் வழங்கினர்.
இருக்கு... ஆனாஇல்லே: நாக் குழு தலைவர் சிரோகி பேசியதாவது: காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி கட்டமைப்பு சிறந்த முறையில் உள்ளது. இருப்பினும் வெளிமாநில மாணவர்களை ஈர்க்கும் அம்சங்கள் குறைவாகவே உள்ளன. அவற்றை மேம்படுத்த வேண்டும்.
சுகாதாரத்தை சிறப்பாக கற்பிக்கிறது. ஆனால் உட்கட்டமைப்பில் சுகாதார மேலாண்மை சிறப்பாக இல்லை. திறன்மிக்க பேராசிரியர்களை பல்கலை பெற்றுள்ளது. ஆனால் பல்கலை உட்கட்டமைப்பில் கட்டடங்கள் மேம்படுத்தப்பட வில்லை.
2010 - 2015 வரை கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களிடம் உரையாடியபோது மொழியியல் தொடர்புதிறன் குறைந்து இருப்பது தெரிகிறது. அதனை அவர் களுக்கு பல்கலை சிறந்த முறையில் கற்பிப்பது அவசியம்என்றார்.

0 comments:

Post a Comment