படித்த தலித் இளைஞர்கள் தொழில் துவங்க வாய்ப்பு!

படித்த தலித் இளைஞர்கள் தொழில் துவங்க வாய்ப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் எழுந்திடு இந்தியா திட்டத்தை வேகப்படுத்த தலைமை செயலர் தலைமையில் 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 9036 தொழிற்சாலைகள் உள்ளன. இதில்பெரிய தொழிற்சாலைகள் 77, சிறு குறு தொழிற்சாலைகள்-8766, நடுத்தர தொழிற்சாலைகள் -191 அடங்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளதால்,ஒவ்வொரு ஆண்டும் திறமையான பொறியியல் பட்டதாரிகள் வெளியே வருகின்றனர்.
இவர்களிடம் தொழில் திறன்ஆர்வம் இருந்தாலும்தொழில்முனைவோராக உருவாக முடியாததற்கு -முதலீடு இன்மை பிரதானக் காரணமாக உள்ளது.தெருவுக்குத் தெரு வங்கிகள் இருந்தாலும்கடன் பெறுவதற்குள் மூச்சு முட்டுகிறது. பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் கடனுதவி எளிதாகக் கிடைக்கிறது.
ஆனால்படித்த இளைஞர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க தயக்கம் காட்டுகின்றன. குறுந்தொழில் முனைவோருக்கு வங்கிகள் மட்டுமல்லநிதி நிறுவனங்கள்கூட கடன் வழங்க முன்வருவதில்லை. அப்படியே கடன் வழங்கினாலும்வட்டி விகிதம் அதிகம்.குறிப்பாகதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் தொழில் துவங்குவதற்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.
இது போன்று திறமை இருந்தும் முதலீடு இல்லாமல்கண்ணை கட்டிக் காட்டில் விட்டதைபோன்று தவிக்கும் தலித்பழங்குடியின மக்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டாண்ட் அப் இந்தியா (எழுந்திடு இந்தியா) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்பெண்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தொழில் கடன் பெறலாம். மூன்றாண்டுகளுக்கு வருமான வரி கிடையாது. ஏழு ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்தினால் போதும். இதற்கு குறைந்த வட்டி வசூலிக்கப்படுகிறது.
தலித்பழங்குடியின இளைஞர்கள் தொழில் துவங்க வரப்பிரசாதமாக இத்திட்டம் அமைந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவை தொடர்ந்துபுதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் &'எழுந்திடு இந்தியா திட்டத்தை வேகப்படுத்த தலைமை செயலர் தலைமையில் 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் நிதி செயலர்எம்.எல்.ஏ.,க்கள் தீப்பாய்ந்தான்கீதா ஆனந்தன்சென்னை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர்புதுச்சேரி சிட்பி வங்கி உதவி பொதுமேலாளர்நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர்புதுச்சேரி சமூக நலத் துறை ஆணையர்மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர்ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குனர் உள்பட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கமிட்டி மூன்று மாதத்திற்கொரு முறை கூடி இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிப்பதோடுகண்காணிக்கவும் வேண்டும். அத்துடன் தேசிய அளவிலான செயலாக்க கமிட்டிக்கு பரிந்துரைகளும் வழங்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment