புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும்!
காளையார்கோவில்: புதிய கல்வி கொள்கையை
கைவிடவேண்டும், என தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் ரங்கராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக அரசு, 7 வது ஊதியக் குழுவை
உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு முன், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
கடந்த 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்டோருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் இழப்பு
ஏற்படுகிறது. இதனால் 25 ஆயிரம் இடைநிலை
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசை போல மாநில அரசு ஊழியர்களுக்கு
இதர படிகள் வழங்கப்படுவதில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு
தேவையில்லை. முதல்வர் தலையிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை
வரைவு முன்மொழிவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் சிறுபான்மையினர் நடத்தும்
பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மும்மொழிக் கொள்கை உடைய புதிய கல்வி கொள்கையை
கைவிட வேண்டும். கல்விக் திட்டங்களை மாநில அரசே முழுமையாக செயல்படுத்த வேண்டும், என்றார். மாநிலத் தலைவர் காமராஜ், பொருளாளர் ஜோசப் சேவியர், ஓய்வு பெற்றோர் பிரிவு பொதுச்செயலர் அன்பழகன்
உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment