தமிழகம் முதலிடம்

சென்னைஉயர் கல்வி கற்கும் மாணவியர் எண்ணிக்கையில்தமிழகம் முதலிடத்தில் உள்ளதுஎனஉயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
சட்டசபையில்கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஆண்டி அம்பலம்: நத்தம் தொகுதியில்அரசு கல்லுாரி எதுவும் இல்லை. எனவேமாணவ,மாணவியர் உயர் கல்வி கற்க, 50 கி.மீ.துாரத்தில் உள்ள திண்டுக்கல் செல்ல வேண்டி உள்ளது. எனவே,அரசு மகளிர் கலைக் கல்லுாரி துவக்க அரசு முன்வருமா?
அமைச்சர் அன்பழகன்: திட்டம் எதுவும் இல்லை.
தமிழகத்தில்உயர் கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கையில்இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் உயர் கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை, 22.7 சதவீதமாக உள்ளதுதமிழகத்தில், 42.7சதவீதமாக உள்ளது.
தி.மு.க., - பூங்கோதை: ஆலங்குளம் தொகுதியில்அரசு கல்லுாரி துவக்க வேண்டும்புதிய பாடப்பிரிவுகளை துவக்க வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்: கடந்த ஐந்து ஆண்டுகளில், 959 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., - எழிலரசன்: மாவட்டத் தலைநகரமாக திகழும் காஞ்சிபுரத்தில்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும்.
அ.தி.மு.க., - ராஜாகிருஷ்ணன்: பகர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவமாணவியர்உயர்கல்வி கற்க, 70 கி.மீ.துாரத்தில் உள்ளஈரோடு செல்ல வேண்டி உள்ளது. எனவேஅந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும்.அமைச்சர் அன்பழகன்: பரிசீலித்துஉரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

0 comments:

Post a Comment