தமிழில் நூலக படிப்பு துவங்க கோரிக்கை

சென்னை: கல்லுாரிபல்கலைகள்நுாலக பட்டப் படிப்புகளைதமிழில் நடத்துவதில் அக்கறை காட்டாததால்தமிழில் நுாலக பட்டம் பெற்றவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அரசின் வேலைவாய்ப்பு விதிகளின் படிதமிழ் வழியில் படித்தால், 20 சதவீத முன்னுரிமை வழங்கலாம். ஆனால்நுாலக படிப்பு தமிழில் இல்லாததால்இந்த முன்னுரிமை வழங்கப்படவில்லை. தற்போதைய நிலையில்தமிழகத்தில்தஞ்சை தமிழ் பல்கலையில் மட்டுமே நுாலக பட்டம் மற்றும் மேற்படிப்புகள்,தமிழில் நடத்தப்படுகின்றன. 
மற்ற மாவட்ட மாணவர்களுக்குஇந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. செம்மொழி அந்தஸ்தும்கலாசார வரலாற்றையும் கொண்டதமிழ் மொழியின் வளர்ச்சிக்குஅதிக அளவில் ஆராய்ச்சிகள் தேவையுள்ளன;ஆராய்ச்சிக்கான புத்தகங்கள்ஆவணங்களை பாதுகாக்கநுாலக பராமரிப்பு மிகவும் முக்கியமானது.
தற்போதைய நிலையில்பெரும்பாலான இடங்களில்ஆங்கிலம் படித்த நுாலகர்கள்தமிழ் புத்தகங்களை பராமரிப்பதால்ஆராய்ச்சி மாணவர்களுக்குநுாலகத்தில் சரியான புத்தகம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. 
இந்நிலையை மாற்றஅனைத்து கல்லுாரி மற்றும் பல்கலையில்தமிழில் நுாலக படிப்பு கொண்டு வர வேண்டும் எனதமிழ்நாடு தொழில்முறை நுாலகர்கள் சங்க செயலர் எஸ்.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment