’நீட்’ தேர்வு; கோர்ட் கண்காணிப்பில் விசாரணை கிடையாது!



புதுடில்லி: மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும், நீட் எனப்படும், தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியானது குறித்து, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் மனுவை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம்ஹல்த்வானி மாவட்டத்தில்நீட் இரண்டாம் கட்டத் தேர்வு,சமீபத்தில் நடந்தபோதுதேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாகசுப்ரீம் கோர்ட் கண்காணிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்திஅன்சுல் சர்மா என்ற மாணவர் மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.ஆர்.தவேநாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது: இதுபோன்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க முடியாது. இதை நீதிமன்றங்கள் கண்காணிக்க இயலாது. சம்பவம் நிகழ்ந்தஹல்த்வானி மாவட்ட எஸ்.எஸ்.பி.மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள்அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாகஐகோர்ட்டில் வழக்கு தொடருங்கள்.
போலீசார் விசாரணை நடத்தி வருவதால்அவர்களை குறை கூற முடியாது. இதில்நாங்கள் ஏன் தலையிட வேண்டும்இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாட்டை கண்காணித்து வரும்லோதா குழுவும்வினாத்தாள் வெளியானது குறித்து விசாரித்து வருகிறது. எனவேமனுவை விசாரிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்துமனுதாரர்அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

0 comments:

Post a Comment