புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் அரசு பள்ளி மாணவர்களுக்கு,அமைச்சர் ஷாஜகான் மழை கோட் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் குப்புசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மழை கோட் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில் மாணவர்களுக்கு, அனைத்து வகையிலும் படிப்பதற்கு அரசு உதவி செய்கிறது. மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து மாநில அளவில் சிறந்த பள்ளியாக விளங்க வேண்டும். பள்ளி பருவத்திலிருந்தே சேவை செய்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பள்ளி வளாகத்தை சுற்றிப்பார்த்த அமைச்சர், மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியை ஜோதி கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment