அரசு விடுதியில் மாணவி தற்கொலை!

செஞ்சி: அரசு விடுதியில், 9ம் வகுப்பு மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாகவிடுதி வார்டன் உட்பட நான்கு பேர்,சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம்அருளவாடி கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து மகள் வினிதா, 14; அன்னியூரில் உள்ள அரசு விடுதியில் தங்கி, 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 8ம் தேதி காலைவிடுதி அறையில் வினிதா துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். 
பள்ளி ஆசிரியை அடித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால்என் மகள் தற்கொலை செய்து கொண்டார்;விடுதி வார்டன் மற்றும் ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர் எனவினிதாவின் தந்தை அல்லிமுத்துபோலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்துதற்கொலை என பதிவு செய்த வழக்கை,தற்கொலைக்கு துாண்டியது என்ற பிரிவில் போலீசார் மாற்றம் செய்தனர்.
உறவினர்கள் மறியல்: இந்நிலையில் நேற்றுமுண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த,வினிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்வழக்கை எஸ்.சி., - எஸ்.டி.பிரிவின் கீழ் மாற்றம் செய்ய வேண்டும்இழப்பீடாக, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திபிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துமதியம், 1:00 மணிக்கு மருத்துவமனை எதிரே மறியல் செய்ய முயன்றனர். அதிகாரிகள் பேசியதை அடுத்து, 3:30 மணிக்கு,மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை: விடுதி வார்டன் விஜயலட்சுமிசமையலர்கள் அம்மாச்சிமகாலட்சுமிஇரவு காப்பாளர் சுமதி ஆகியோரைதற்காலிக பணி நீக்கம் செய்துமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அனந்தராமன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியை மீதான புகார் குறித்துகல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment