ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் 896 பேர் எழுதினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,186 பேர் விண்ணப்பித்தனர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் காலையில் நடந்த தேர்வில் 241 பேரும், ராஜா மேல்நிலைப்பள்ளியில்217 பேரும், சுவார்டஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 223 பேரும், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 154 பேரும் எழுதினர்.
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாலையில் நடந்த தேர்வில் 61 பேர் எழுதினர். விண்ணப்பித்தோரில் 290 பேர் வரவில்லை. தேர்வு மையத்தை கலெக்டர் நடராஜன், டி.என்பி.எஸ்.சி.,உறுப்பினர் சேதுராமன்,மாவட்ட முதன்மை நீதிபதி மீனா சதீஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
0 comments:
Post a Comment