பல்கலைக்கழக கல்வி வரை இலவசம் ஆதிதிராவிடர் கூட்டமைப்பு!

புதுச்சேரி: தலித் மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல்பல்கலைக்கழக கல்வி வரையில்இலவசமாக வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்துகூட்டமைப்பு தலைவர் அருள்தாஸ் மற்றும் நிர்வாகிகள்அமைச்சர் கந்தசாமியை சந்தித்து அளித்த மனு:
வேலையில்லா படித்த ஆதிதிராவிட பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5000 நலத்துறை மூலம் வழங்க வேண்டும்நுாறு சதவீதம் சிறப்பு கூறு திட்ட நிதியைமுழுமையாக தலித் மக்களுக்கு செலவிட வேண்டும் என்பதை தீர்மானமாக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.
நலத்திட்டங்கள் வழங்குவதற்குவருமான உச்சவரம்பை நீக்க வேண்டும். தலித் மாணவர்க்ளுக்கு ஆரம்ப கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரையில் இலவசமாக வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவம்பொறியியல்நர்சிங் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டசபையில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment